முதல் முறையாக சென்னை வந்த திமிங்கலம் வடிவிலான விமானம்

உலகத்திலேயே மிகப்பெரிய திமிங்கலம் வடிவிலான சரக்கு விமானம் முதல் முறையாக சென்னை வந்தது. நெதர்லாந்து நாட்டை தலைமையிடமாக கொண்டு ஏர்பஸ் விமானம் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களை தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் பல்வேறு வடிவிலான பெரிய ரக பொருட்களை சரக்கு விமானத்தில் ஏற்றிச் செல்வதற்கு வசதியாக திமிங்கலம் வடிவில் சுப்பர் டிரான்ஸ்போர்ட்டர் என்னும் பெலுகா என்ற சரக்கு விமானத்தை 1995ஆம் ஆண்டில் ஏர்பஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த சரக்கு விமானம், ஒரே நேரத்தில் 47 ஆயிரம் கிலோ எடையிலான சரக்குகளை ஏற்றிச் செல்லும்திறன் உடையது. உலகத்திலேயே மிகப்பெரியதான இந்த பெரிய சரக்கு விமானம் முதல் முறையாக சென்னை விமான நிலையத்துக்கு வந்தது. ஏர்பஸ் பெலுகா சரக்கு விமானம் குஜராத் மாநிலம் அகமேதாபாத்தில் இருந்து தாய்லாந்து நாட்டில் உள்ள பட்டாயாவுக்கு செல்லும் வழியில் எரிபொருள் நிரப்புவதற்காக சென்னை வந்தது என சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறினர். இந்த வகை பெரிய சரக்கு விமானம் சென்னைக்கு வருவது இதுவே முதல் முறை. எரிபொருள் நிரப்பிய பிறகு அந்த விமானம் சென்னையில் இருந்து தாய்லாந்தில் உள்ள பட்டாயா நகருக்கு புறப்பட்டு செல்லும் எனவும் அவர்கள் கூறினர்.

Spread the love