மீண்டும் அழகு காட்ட வருகிறார் மீரா ஜஸ்மின்

ரன் திரைப்பட புகழ், நடிகை மீரா ஜஸ்மின் தனது அண்மைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது மீரா ஜஸ்மினா அல்லது அவரின் மகளா என கேட்குமளவுக்கு மாறி போயுள்ளார்.

இப்போதெல்லாம் நடிகைகள் உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக காட்சியளிப்பது வளமையாகிவிட்டது. மீரா ஜஸ்மினும் அவ்வாறே செய்துள்ளார். மீரா ஜஸ்மின் நடிக்கும் போது பெரியளவில் கவர்ச்சி காட்டவில்லை. ஆனால் 39 வயதில் கவர்ச்சியாக வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போதைய நடிகைகளுக்கு போட்டியாக இருக்குமளவுக்கு உள்ளது.

நான்கு வருடங்களுக்கு பின்னர் “மகள்” எனும் மலையாள திரைப்படம் மூலம் சினித்துறைக்குள் மீள கால் பதிக்கிறார் அவர்.

Spread the love