மீண்டும் ருவிட்டரில்  ட்ரம்ப்; தடையை நீக்கினார் மஸ்க்

22 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ட்விட்டரில் இணைந்துள்ளார் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ட்ரம்பை மீண்டும் சமூக வலைதளங்களில் அனுமதிக்கலாமா என்று யோசனை கோரி ருவிட்டர் தளத்தில் வாக்கெடுப்பை நடத்தினார் அதன் உரிமையாளர் எலான் மஸ்க்.

வெள்ளிக்கிழமை அவர் வாக்கெடுப்பை தொடங்கினார். 24 மணி நேரம் வாக்கெடுப்பு நடந்த நிலையில் ௫விட்டரில் 237 மில்லியன் வாடிக்கையாளர்களில் 15 மில்லியன் பேர் வாக்களித்திருந்தனர். இதில் 48.2 சதவீத பேர் ட்ரம்புக்கு எதிராகவும் 51.8 சதவீதம் பேர் ஆதரவாகவும் வாக்களித் திருந்தனர். இந்நிலையில் அவர் மக்கள் ஆதரவைப் பெற்றதால் அவர் மீதான குவிட்டர் தடை நீக்கப்பட்டது. இது குறித்து எலான் மஸ்க் தனது ருவிட்டர் பக்கத்தில், மக்கள் தீர்ப்பே, இறைவனின் தீர்ப்பு. மக்கள் வாக்களிப்பின்படி ட்ரம்ப் மீதான தடை நீக்கப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார்.

Spread the love