வாகன ஓட்டுனர்கள் அவதானம்

நாட்டில் பெய்து வரும் கடும் மழை இன்றும் தொடருமென வாநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் காலை வேளையிலேயே மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது.

வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களின் நாள் முழுவதும் கடும் முகில் கூட்டத்துடனான வாநிலை நிலவும். வட மத்திய மாகாணம் மற்றும் மாத்தளையில் 100 mm மழை வீழ்ச்சிக்கான வாய்ப்பு காணப்படுவதாக வாநிலை எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை போன்ற இடங்களிலும் 100mm மழை இன்று பெய்யக்கூடும்.

காங்கேசன்துறை முதல், திருகோணமலை, மட்டக்களப்பினூடாக ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் கடும் காற்று வீசக்கூடுமெனவும், மணிக்கு 20-25 km வேகத்தில் வீசுமெனவும், 40-45 km வேகத்துக்கு அதிகரைக்கலாமெனவும் வாநிலை அவதான நிலையம் மேலும் அறிவித்துள்ளது.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுளளதுடன்,மண்சரிவுகளுக்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. வீதிகள் வழுக்கும் நிலையில் காணப்படுவதனால் வாகன ஓட்டுனர்கள், குறிப்பாக மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

Spread the love