மனித உரிமை துஸ்பிரயோகங்கள் இலங்கையில் முடிவிற்கு வராது

இலங்கை அரசாங்கத்தின் பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான முன்மொழிவுகள் மூலம் அரசாங்கத்தின் மனித உரிமை துஸ்பிரயோகங்கள் முடிவிற்கு வராது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மதிப்பிழந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் மோசமான துஸ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இந்த சட்டத்தை கைவிடுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தங்களை கொடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. மதிப்பிழந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி நீண்டகாலமாக தன்னிச்சையாக தடுத்துவைத்திருத்தல் சித்திரவதைகள் போன்றவற்றில் இலங்கை அரசாங்கம் ஈடுபடுகின்றது என மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையின் ஏனைய வர்த்தக சகாக்களும் நிதிவழங்குநர்களும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் இலங்கை அரசாங்கம் இந்த சட்டத்தை கைவிடவேண்டும் என அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. பரந்துபட்ட துஸ்பிரயோகங்களை முடிவிற்கு கொண்டுவருவதற்கு உதவாத உத்தேச திருத்தங்களை நிராகரிக்கவேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Spread the love