மத்திய வங்கி வௌியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கியானது நாட்டின் நிதி நிலைசார் பொருளாதாரத்தை பேணும் முகமாக 4 மார்ச் 2022 அன்று எடுத்த திட்டத்தின் வரைபாக வைத்து முக்கிய அறிவிப்பை மேற்கொண்டுள்ளது.

எமது இலங்கைத் திருநாட்டின் வெளியே ஏற்பட்டிருக்கு பல அதிர்ச்சி தரும் காரணிகளோடு உலகியல் அரங்கில் ஏற்பட்டிருக்கும் சடுதியான மாறுதல்கள் காரணமாகவும் அத்துடன் நாட்டின் உள்ளே ஏற்பட்டிருக்கும் பொருளார பின்னடைவு, அபிவிருத்தி நிலை வளர்ச்சி பின்னடைவை நாடு சந்தித்துக்கொண்டிருக்கின்ற வேளையில் நாட்டினை ஒரு தளம்பல் நிலையில்லாமல் சமாளித்துக்கொள்ளும் முகமாகவும் நாட்டின் அண்மைக்கால அபிவிருத்தியினையும் பரிசீலனைக்கு கொண்டுவந்து இத்தகைய பொருளாதார சிக்கல்களிலிருந்து நாட்டினை மீட்டு வெற்றிகரமான பொருளாதாரத்தினை ஏற்படுத்தும் முகமாகவும் இலங்கை மத்திய வங்கியானது அனைத்தும் உள்ளடக்கிய கொள்கைசார் திட்டமொன்றினை 2022 மார்ச் 04 ல் அறிவித்திருந்தது.

அக்கொள்கை சார் திட்டத்தின் மூலமாக இலங்கை மத்திய வங்கியானது உலகியலில் தோற்றம்பெற்றுவரும் உலகப்பொருளாதாரம் சம்பந்தமாகவும் உலக நிதியியலின் காரணிகளின் சந்தை நிலை அபிவிருத்தி ஆகியவற்றை சர்வதேசமட்டத்திலும் உள்நாட்டு ரீதியிலும் தன் பங்குக்கு கண்காணிப்பை மேற்கொண்டும் வருகிறது. அத்துடன் உலகப்பொருளாதார நிதி நிலையில் ஓர் உறுதிப்பாட்டு இலக்குடன் பயணிக்கும் தன்மைக்குத்தக்கதாக பொருத்தமான வழிமுறைகளை தாம் மேற்கொள்ளும் என வெளியிடப்பட்ட கொள்கைசார் திட்டத்தில் கூறி நின்றது.

இந்த வகையில், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அந்நியச்செலாவணி வீதத்தில் மேலும் நெகிழ்ச்சித்தன்மையை  சந்தைகளுக்கு அனுமதி‍க்கும் நுட்பமாக . வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கல்களில்  ஐக்கிய அமெரிக்க டொலரொன்றிற்கு ரூ.230 இனைவிஞ்சாத மட்டங்களில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியுமென இலங்கை மத்திய வங்கி அறிவித்தல் வழங்கியுள்ளது.

மேலும் இலங்கை மத்திய வங்கியானது உள்நாட்டு வெளிநாட்டு சந்தையினது நாளாந்த  அசைவுகளையும் அதனது பாதக சாதக தன்மைகளினையும்  தொடர்ந்தும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. அதனடிப்படையில்  அதற்கேற்றபடியான நாட்டுக்குத்தேவையான  பொருத்தமான கொள்கைத் திருத்தங்களை மேற்கொள்ளும் என மத்திய வங்கி அறிக்கையிட்டுள்ளது.

Spread the love