மணல், கல், மண் களிமண் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கான புதிய அனுமதிப்பத்திர முறை அறிமுகம்

மணல், கல், மண் மற்றும் களிமண் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கான புதிய அனுமதிப்பத்திர முறையொன்று எதிர்வரும் 02ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் மணல், கல் மற்றும் மண் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரங்களில் வாகன இலக்கம் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லப்பட வேண்டிய வீதி என்பன உள்ளடக்கப்படாமையால் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் பிரேம் தெரிவித்துள்ளார்.

சுற்றாடல் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட விசேட கண்காணிப்பை அடுத்து, எதிர்வரும் 02ஆம் திகதி முதல் அனைத்து போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களிலும் வாகன இலக்கம், போக்குவரத்து பாதை உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Spread the love