பேரணிக்கு எதிராக பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு நீதிமன்று மறுப்பு

இன்று (02) கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணிக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க நிராகரித்துள்ளார்.

கொழும்பு, விகாரமஹாதேவி பூங்காவில் இருந்து வார்ட் பிளேஸில் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரையான பல பாதைகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை நிராகரித்த நீதவான், ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டம் ஒழுங்கை மீறும் வகையில் செயற்பட்டால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 95ஆவது பிரிவின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

Spread the love