பெங்களூர் அணியின் முக்கிய பொறுப்புகளில் சானியா மிர்ஸா

முதல் முறையாக நடத்தப்படவுள்ள மகளிர் ஐ.பி.எல் போட்டித் தொடரின் ரோயல் செலஞ்சர்ஸ் ஒப் பெங்களுர் அணியின் தலைமை பயிற்றுநராக அவுஸ்திரேலியாவின் பென்சோயர் (ஆலோசகராக இந்திய டென்னிஸ் வீராங்கனையாக சானியா மிர்ஸாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நடைபெறவுள்ள முதலாவது மகளிர் ஐ.பி.எல். டி 20 கிரிக்கெட் போட்டித் தொடர் அடுத்தஎதிர்வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டித் தொடருக்கான வீராங்கனைகளை எடுக்கும் ஏலம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம் பெற்றிருந்தது.

5 அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரின் வீராங்கனைகளுக்கான ஏலத்தின்போது, ஆர்.சீ.பீ.யைத் தவிர ஏனைய 4 அணிகளினதும் தலைமை பயிற்றுநர், இயக்குநர், நிர்வாகிகள் என அனைவரும் நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும், ஆர்.சீ.பீயின் பயிற்றுநர் குழாத்தில் எவரும் நியமிக்கப்படாத நிலையில், இயக்குநரான மைக்ஹெசன் மாத்திரமே பங்கேற்றிருந்தார். இந்நிலையில், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பென் சோயரை ஆர்.சீ.பி.தலைமை பயிற்றுநராகவும், ஆலோசகராக இந்திய டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்ஸாவை ஒப்பந்தம் செய்வதாக அறிவித்துள்ளது.

நியூஸிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுநராகவுள்ள பென் சோயர், கடந்த ஆண்டு மகளிர் உலக கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் உதவி பயிற்றுநராக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அபுதாபி பகிரங்க டென்னிஸ் போட்டி முடிவடைந்ததும், சானியா மிர்ஸா ஆர்.சீ.பீ. அணியுடன் இணைவார். இது அவரின் கடைசி தொழில்முறை போட்டியாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love