பூமியை போன்ற மற்றுமொரு கிரகம்! நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

பூமியை போன்ற மற்றுமொரு கிரகம் ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை பயன்படுத்தி அவர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். பூமியில் இருந்து 41 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்த கோள் பூமியை ஒத்ததாக அமைந்துள்ளது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

LHS 475 b என பெயரிடப்பட்டுள்ள இந்த கோளின் வளிமண்டல அமைப்பு எப்படியானது என்பது இன்னும் தெளிவாகவில்லை. இந்த கோளில் சில வாயுக்கள் இருப்பதாக ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பௌதீக ஆய்வுக்கூடத்தில் கலாநிதி பட்டதாரியான ஜேகப் லஸ்டிங் யேகேர் தெரிவித்துள்ளார்.

Spread the love