புளூ ஆரிஜின் நிறுவனத்தால் விண்வெளிக்கு சுற்றுலா சென்ற 74 வயது மூதாட்டி

(வோஷிங்டன்) அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரரான ஆலன் ஷெப்பர்ட்டின் மகளான 74 வயதான லாரா ஷெப்பர்ட் உள்ளிட்ட 6 பேரை கொண்ட குழு புளூ ஆரிஜின் நிறுவனத்தின் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பியது.


உலகின் முன்னணி ஒன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் நிறுவுனரான ஜெப் பெசோஸ், புளூ ஆரிஜின் என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்வதை நோக்கமாக கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் தனது நிறுவனத்தின் தயாரிப்பான நியூ ஷெப்பர்ட் விண்கலத்தின் மூலம் ஜெப் பெசோஸ் விண்வெளிக்கு சென்று வந்தார். இது மிகப்பெரும் மைல்கல் சாதனையாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரரான ஆலன் ஷெப்பர்ட்டின் மகளான 74 வயதான லாரா ஷெப்பர்ட் உள்ளிட்ட 6 பேரை கொண்ட குழு புளூ ஆரிஜின் நிறுவனத்தின் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பியது.


லாரா ஷெப்பர்ட்டின் தந்தையான ஆலன் ஷெப்பர்ட் கடந்த 1961 ஆம் ஆண்டு மே 5ஆம் திகதி புளோரிடா மாகாணத்தில் இருந்து மெர்குரி விண்கலத்தில் விண்வெளிக்கு பயணித்து. அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர் என்கிற பெருமையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love