புற்றுநோயை 100% குணப்படுத்துவதற்கு ‘டோஸ்டார்லிமாப்’ என்ற மருந்து தயார்

அமெரிக்க விஞ்ஞானிகளால் புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் ‘டோஸ்டார்லிமாப்’ என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மையத்தில் நடத்தப்பட்ட சோதனையிலேயே இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து 18 குடற்புற்றுநோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.

இந்த மருந்து மூலம் 100சதவீதம் அவர்கள் பூரண குணமடையவைத்துள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட பரிசோதனையில் புற்றுநோய் உடலில் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பொதுவாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு சிகிச்சைக்கு பின் பக்கவிளைவுகள் காணப்படும். ஆனால் இவர்களுக்கு அவ்வாறான பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்க மருத்துவர் ஒருவர் தெரிவிக்கையில், புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு போஸ்டர்லிமாப் என்ற இந்த மருந்து மூன்று வாரங்களுக்கு ஒரு முறை என 6 மாதங்களுக்கு உடலில் செலுத்தப்படும். இதன் மூலம் இயற்கையாகப் புற்றுநோய் ஷெல்கள் அழிகின்றன. எனினும் இந்த மருந்தை ஏனைய மருத்துவர்கள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுசெய்து உறுதிசெய்யவேண்டும். இன்னும் அதிக எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகளுக்கு வழக்கப்பட்டு, தொடர் பரிசோதனைகள் நடத்தப்பட்ட பின்பே இந்த மருந்து சந்தைக்கு வரும் என்றார்.

source from CNN
Spread the love