பாதுகாப்பு வலய அறிவிப்பு அடிப்படை உரிமை மீறல் -மீளப்பெறுமாறு ம.உ.ஆணைக்குழு வலியுறுத்து

அரச இரகசியங்கள் சட்டத்தை பயன்படுத்தி அதி உயர் பாதுகாப்பு வலயத்தை பிரகடனப்படுத்தும் அரசாங்கத்தின் அணு குமுறை நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை முற்றிலும் மீறும் செயலாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

அதி உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்துவதற்கு அரச இரகசியங்கள் சட்டத்தை பயன்படுத்த முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். எனவே அதி உயர் பாதுகாப்பு வலயத்தை பிரகடனப்படுத்தும் 2298/63 இலக்க வர்த்தமானியை மீளப் பெறுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்யுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love