பாண் விலை 10 ரூபாவால் குறைப்பு-அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

இன்று(31) நள்ளிரவு முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை குறைக்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அதற்கமைய, 450 கிராம் நிறையுடைய பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

கோதுமை மாவின் விலை குறைவடைந்தமைக்கு இணையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன குறிப்பிட்டார்.

Spread the love