பேருந்து கட்டணம் 30%ஆல் உயரும் – தனியார் பேருந்து சங்கம்

அரசாங்கம் உரிய தீர்வை வழங்கவில்லை எனின் மொத்த பஸ் கட்டணத்தை முப்பது வீதத்தால்(30%) உயர்த்துவதற்கும்  குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை ரூ.30 ஆக உயர்த்துவதற்கும் தீர்மானித்துள்ளதாக மாகாணங்களுக்கிடையிலான தனியார் பேருந்து சங்கம், நேற்றுமுன்தினம் 12ம் திகதி தெரிவித்திருந்தது.

சங்கத்தின் குழு உறுப்பினர்களுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மாகாணங்களுக்கிடையிலான தனியார் பேருந்து சங்க செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார். கலந்துரையாடலின் போது டீசல் மானியம் வழங்குவதற்காக அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதற்கும் உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்றார்.

இதேவேளை, எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ள சதவீதத்துக்கு அமைய, பேருந்து உரிமையாளர்களுக்கு ஏதேனுமொரு வகையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சருடனும் பஸ் உரிமையாளர்களுடனும் தாம் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், உடனடியாக பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love