பதவியேற்று 45 நாட்களில் பதவி விலகினார் பிரிட்டிஷ் பிரதமர்!

பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ் தனது பத வியை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் பதவியேற்று 45 நாட்கள் ஆகும் நிலையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். டிரஸ்ஸுக்கு எதிராக அவருடைய கன்சர்வேடிவ் கட்சியிலேயே நேரிட்ட அதிருப்தி மற்றும் எதிர்ப்பு காரணமாக அவர் ராஜிநாமா செய்ய நேரிட்டுள்ளது.

பிரித்தானியாவில் அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நிலவி வரும் நிலையில், பிரதமர் லிஸ் டிரஸ் நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளமை சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்து அமைச்சர்கள் பதவி விலகிய நிலையில் நேற்றைய தினம் லிஸ் டிரஸ் ராஜினாமா செய்திருக்கிறார்.

பதவியேற்ற 45 நாட் களில் அவர் பதவி விலகியது பிரித்தானிய அரசியல் வட்டாரத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ன வாக்குறுதிகளைத் தெரிவித்து வெற்றி பெற்றேனோ அவற்றை என்னால் நிறைவேற்ற முடியவில்லை என்று செய்தியாளர்களுடன் பேசிய டிரஸ் தெரிவித்துள்ளார். கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து தாம் ராஜிநாமா செய்வது பற்றி மன்னர் சார்லஸிடம் தெரிவித்துவிட்டதாகவும் டிரஸ் குறிப்பிட்டார். பிரிட்டனில் பிரதமராகப் பதவி வகித்தவர்களிலேயே மிகக் குறைந்த காலம் வெறும் 45 நாள்கள் பதவி வகித்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love