நீண்ட இரவுக் காலத்திற்குச் சென்றது அந்தார்ட்டிக்கா

‘உலகின் தென்கோடியிலுள்ள மிகப்பெரிய கண்டமான அந்தார்ட்டிக்காவில் இன்னும் 4 மாதங்களுக்கு அங்கு சூரிய உதயம் இருக்காதென ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்தனர். உலகில் சில நாடுகளில், சில இடங்களில் மட்டும்  சூரியன் அதிக நேரம் மறையாமல் இருக்கும். சில இடங்களில் சூரியன் மறையவே மறையாது. ஆனால், சற்று வித்தியாசமாக அந்தார்ட்டிக்காவில் நான்கு மாதங்களுக்கு சூரிய உதயம் இருக்காதெனத் தெரிவிக்கப்பட்டது.

அந்தார்ட்டிக்காவில் இன்னும் நான்கு மாதங்களுக்கு, சூரிய உதயம் இருக்காதென ஆராய்ச்சியாளர்கள் அறிவித்தனர். லோங் நைற் எனப்படும் நீண்ட இரவு காலத்திற்கு அந்தார்ட்டிக்கா சென்று விட்டதாகவும், இன்னும் 4 மாதங்களுக்கு அங்கு சூரிய உதயம் இருக்காதெனவும், ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அங்கு இறுதியான சூரியன் மறைவு கடந்த மே மாதம் 13ஆம் திகதி நிகழ்ந்தது. பூமியின் ஏனைய பகுதியில் ஒரு நாள் என்பது, இரவு பகல் சேர்ந்தது. ஆனால் அந்தார்ட்டிக்காவில் இரவு பகல் மாற்றம் பெறுவதே சுமார் 6 மாதங்களுக்கு ஒரு முறை தான், பூமி தனது அச்சில் 23.5 பாகை சாய்ந்து இருப்பதே இதற்குக் காரணமென, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

Spread the love