நிலவில் மோதி வெடிக்கப்போகும் ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9 ரொக்கெட்

சில ஆண்டுகளுக்கு முன், எலோன் மஸ்கின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் ஏவப்பட்ட ரொக்கெட், நிலவின் மீது மோதி வெடிக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு தி ஃபால்கன் 9 பூஸ்டர் ரொக்கெட் ஏவப்பட்டது. அந்த பால்கன் 9 ரொக்கெட் தற்போது நிலவில் மோதி வெடிக்கவிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஒரு ரொக்கெட், எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இன்றி நிலவில் மோதவுள்ளமை இதுவே முதல் முறையென விண்வெளி ஆய்வாளரான ஜோனதன் மெக் டோவல் கூறினார். நிலவில் ரொக்கெட் மோதுவதால் ஏற்படும் தாக்கம் சிறிதாகவே இருக்கும் என்றும், அவர் கூறினார். ஒரு வானிலை செயற்கைக் கோள், 10 லட்சம் மைல் தொலைவுக்குப் பயணித்து நிலை நிறுத்திவிட்டு, புவிக்குத் திரும்ப முடியாத ஃபால்கன் 9 ரொக்கெட் ஏழு ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்டது. ஃபால்கன் ரொக்கெட் மோதலிலிருந்து, விஞ்ஞானிகள் எதையும் கற்றுக் கொள்ள விரும்பவில்லை என்பது போலத் தோன்றுவதாக, பேராசிரியர் மெக்டோவெல் தெரிவித்தார். இப்போது விண்வெளியில் சுற்றித் திரியும் குப்பைகள், அரிதாகவே மோதி வெடிக்கின்றன. இதனால், இப்போது எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாமல் இருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் பூமிக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது எனவும், மெக்டோவெல் தெரிவித்தார்.

Below link describes the rocket crash on the moon. watch the video to get more experience

https://www.space.com/spacex-falcon-9-rocket-hit-moon-march-2022

Spread the love