நிலவிற்குச் சுற்றுலா செல்லும் விண்வெளி வீரர் அல்லாத முதல் நபர்

2023-ஆம் ஆண்டில் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் நிலவிற்குச் சுற்றுலா செல்லவுள்ள ஜப்பானியக் கோடீஸ்வரர் Yusaku Maezawa முன்னோட்டமாக சென்ற 12 நாள், விண்வெளிப் பயணத்தை முடித்துக் கொண்டு, பூமிக்குத் திரும்பினார்.

ரஷ்யாவின் Soyuz விண்கலத்தின் மூலம் கடந்த 8 ஆம் திகதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு 2 வீரர்களுடன் Yusaku விண்வெளிப் பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில், 12 நாள் பயணத்தை முடித்துக் கொண்ட விண் வெளிச்சுற்றுப் பயணக்குழு Kazakhstan வந்து இறங்கினர்.2023-ல் திட்டமிடப்பட்டுள்ள, நிலவிற்குச் செல்லும் சுற்றுலாத் திட்டத்தில், விண் வெளி வீரர் அல்லாத உலகின் முதல் தனி நபராக, Yusaku Maezawa இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love