நாட்டிற்கு வருகை தரும் இந்திய சுற்றுலா பயணிகளால் இந்திய ரூபாவை பயன்படுத்த அனுமதி- மத்திய வங்கியின் ஆளுநர்

இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளால் இந்திய ரூபாவை பயன்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்திய வணிக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

‘இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் எதிர்காலப் பயணம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த செயலமர்வு மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தலைமையில் நடைபெற்றது. 

இதன்போது உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் விளக்கமளித்தார்.  தகவல் தொழில்நுட்பம், மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பில் இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது. 

இலங்கை மத்திய வங்கியினால் இந்திய ரூபா பெயரிடப்பட்ட நாணய அலகாக மாற்றப்படுவதால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக கொடுக்கல், வாங்கல்கள் மாத்திரமன்றி இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கும் இந்திய ரூபாவை  பயன்படுத்த முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர், கலாநிதி நந்தலால் வீரசிங்க  இதன்போது தெரிவித்துள்ளார்.

Spread the love