நாட்டில் சர்வக்கட்சி இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் (Karu Jayasuriya) பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதற்கு பல கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 13 யோசனைகளுக்கமைய, இடைக்கால அரசமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும் நேற்று (07-05-2022) இணக்கம் வெளியிட்டது. இந்த நிலையில், இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக கரு ஜயசூரிய (Karu Jayasuriya) நியமிக்கப்படுவார். கரு ஜயசூரிய நாடாளுமன்றம் வருவதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியில் எம்.பி ஒருவர், தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.