முடிந்தால் மோதி வெற்றி பெற்று காட்டுங்கள்! பிரதமர் சவால்.

தேர்தலுக்கு நாங்கள் தயார். முடிந்தால் எங்களோடு மோதி வெற்றி பெற்று காட்டுங்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நேற்றைய பேரணியில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது உரையில் எதிர்கட்சிக்கு சவால் விட்டிருந்தார்.

“நடைபெற்ற, நடைபெற்று கொண்டிருக்கும் விடயங்கள் என்ன விளைவுகளை தரும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நன்றாக சிந்தித்தே இந்த அரசாங்கம் முடிவுகளை எடுத்து வருகிறது.

யுத்தம் நிறைவுக்கு வரும் போது சர்வதேசத்திடம் போய் என்ன சொல்லுவார்கள் என தெரிந்துகொண்டே முடிவெடுத்த்தோம். அதே போல அண்மைக்காலங்களிலும் என்ன நடக்கும் என தெரிந்தே முடிவெடுத்தோம். தேர்தலை நோக்கமாக வைத்து முடிவெடுப்பவர்கள் நாங்கள் அல்ல. நாட்டுக்கு நல்லாதான முடிவையே எடுப்போம்.

நாங்கள் மக்களிடம் செல்கிறோம், விவசாயிகளிடம் செல்ல தயாராகி வருகிறோம். சகலவற்றையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்” என தனது உரையில்தெரிவித்துள்ளார் .

பிரதமரின் சவாலை தாம் ஏற்றுக்கொள்வதாகவும், பயத்தின் காரணமாக பிற்போட்ட உள்ளூராட்சி தேர்தலை முடிந்தால் நடத்துமாறும் ஐக்கிய மக்கள் சகதியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் இன்று எதிர்க்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

“பிரதமர் கூறியது போன்றே நாங்களும் வீதிகளில் செல்லவும் தயார், வெள்ளத்தில் செல்லவும் தயார், வயலும் சரி, தேர்தலும் சரி என கூறிய மரிக்கார், பிரதமர் சொன்னது போன்று தேர்தலை நடாத்தி பாருங்கள், மக்கள் யார் பக்கமென நிரூபித்து காட்டுகிறோம் என மீள சவால் விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி இம்முறை கொழும்பிலோ, கண்டியிலோ அல்ல. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டம் நடைபெற்ற அனுராதபுரம், சல்கொட மைதானத்திலேயே நடாத்தப்படும். அதன்போது மக்கள் யாரோடு நிற்கிறார்கள் என நிரூபித்து காட்டுகிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love