தாய்வானை சென்றடைந்துள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்ஸி பெலோசி

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின்  சபாநாயகர் நான்ஸி பெலோசி (Nancy Pelosi) தாய்வானை சென்றடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

அமெரிக்க சபாநாயகரின் Taipei-க்கான  விஜயம் சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான முறுகல் நிலைமையை  மேலும் தூண்டும் அபாயம் காணப்படுகின்றது. இது  தாய்வானை தனி சுதந்திர நாடாக அங்கீகரிக்காத நிலையில்,  அமெரிக்க சட்டத்தின் மூலம் அதன் அரசாங்கத்தை தற்காத்துக்கொள்ள வழிவகுக்கின்றது. 

நான்ஸி  பெலோசி தாய்வானை சென்றடைந்துள்ளதுடன், அவர் விமானத்தில் இருந்து இறங்கும் போது வரவேற்கப்பட்டதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது. சபாநாயகர் நான்ஸி பெலோசி  சீனாவின் அச்சுறுத்தல்களை மீறி Taipei-ஐ  சென்றடைந்துள்ளதாக The Straits Times செய்தி  வௌியிட்டுள்ளது.  25 ஆண்டுகளில் அங்கு விஜயம் செய்யும்  உயர் அமெரிக்க அரசியல்வாதியாக நான்ஸி  பெலோசி பதிவாகியுள்ளார். 

Spread the love