தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து நீக்கம்

தாய்லாந்து பிரதமர் பிரயுத்சான் ஓ சாவை அந்நாட்டு நீதிமன்றம் அதிகாரபூர்வமாக பதவியிலிருந்து இடை நிறுத்தியுள்ளது. இதேவேளை, அவர் தனது பதவி வரம்பு விதியை மீறியுள்ளாரா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பதில் பிரதமராக யார் பொறுப்பேற்பார்கள் என்பது உடனடியாக அறிவிக்கப்படவில்லை .

சட்டத்தின்படி, துணைப் பிரதமர் பிரவித் வோங்சுவான், பல பிரதிநிதிகளில் முதலிடத்தில் உள்ளார். அவர் பிரயுத்தின் நெருங்கிய அரசியல் கூட்டாளி மற்றும் 2014 ஆட்சிக் கவிழ்ப்பை நடத்திய அதே இராணுவக் குழுவின் ஒரு பகுதியாக இருந்துள்ளார்.
பிரதமர் பிரயுத் அரசியலமைப்பில் உள்ள எட்டு ஆண்டு பதவி வரம்பு விதியை மீறியுள்ளாரா என்பது குறித்த முடிவு எப்போது வெளியிடப்படும் என்று நீதிமன்றம் அறிவிக்கவில்லை. அவருக்கு எதிராக முடிவுகள் வெளியானால், அவர் உடனடியாக தனது பதவியை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love