தனுஷின் ஹொலிவூட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியது

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கிரே மேன்’ என்ற ஹொலிவூட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தி கிரே மேன்.

இந்தப்படத்தை அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இயக்கி உள்ளனர். இந்தப் படம் 2009இல் வெளியான தி கிரே மேன் என்ற நாவலைத் தழுவி அதே தலைப்பில் உருவாகிறது.

இந்த நிலையில் ‘தி கிரே மேன் படத்தின் ட்ரெய்லரை தனுஷ் அவருடைய சமூகவலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ட்ரெய்லர் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்தப் படம் ஓடிடி தளத்தில் ஜூலை மாதம் 22ஆம் திகதி வெளியாகவுள்ளது.

Spread the love