தனுஷிடம் பல மணி நேரம் வேலை வாங்கிய இளையராஜா!

தனுஷிடம் இசைஞானி இளையராஜா வேலை வாங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இசைஞானி இளையராஜா இசையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்பட பலர் நடித்து வரும் திரைப்படம் ’விடுதலை’

 இந்த நிலையில் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் இசைஞானி இளையராஜா கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும் ஒரே ஒரு பாடலை தனுஷை அவர் பாட வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த பாடலை தனுஷை பாடவைக்க இளையராஜா நான்கு மணி நேரம் சொல்லி கொடுத்ததாகவும் அதன் பிறகு இந்த பாடல் மிகவும் சிறப்பாக அமைந்ததாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் தனுஷ் பாடிய இந்த பாடல் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love