டீசல் விலை உயர்ந்தால் பஸ் சேவை கட்டாயமாக நிறுத்தப்படும்

டீசல் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டால், பஸ் சேவைகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் நேற்று (23/02/2020) எச்சரிக்கை விடுத்துள்ளது.

சேவைகளை நிறுத்துவது என்பது ஒரு கூட்டான முடிவு என்றும் டீசல் விலையை மீண்டும் உயர்த்தினால் பஸ்களை இயக்க முடியாது போகிற துரதிஷ்ட நிலை ஏற்படும் என்றும் எரிபொருள் விலை அதிகரிக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பஸ் கட்டணத்தை உயர்த்த முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

டீசல் விலை மீண்டும் உயர்ந்தால், வாகன உதிரிப்பாகங்கள் அனைத்தினதும் உதிரிப் பாகங்கள் மற்றும்  டயர்கள், டியூப்கள், எண்ணெய் மற்றும் கிரீஸ் வகைகள் போன்ற துணைப்பொருட்களின் விலைகளையும் அது பாதிக்கும் எனவும் அவற்றின் விலையேற்றமும் பஸ் உரிமையாளர்களைப் பாதிக்கும் என்றும் இதன் காரணமாக தங்களுக்கு எந்த லாபமும் கிடைக்கமுடியாது போகும், என்று குறிப்பிட்டார்.

அதனால், வருமானத்துக்கு மேலான நஷ்டத்தை குறைக்க, பஸ்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், எரிபொருளைச் சேமிக்கவும் தம்மால் பல தீர்வுகள் முன்வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.அத்துடன் பஸ் கட்டணமாக பணம் செலுத்துவதற்கு பதிலாக முற்பண பயண அட்டையை அறிமுகப்படுத்த  அரசாங்கத்திடம் முன்மொழிந்தாகவும் இதுவரை எதுவும் செயற்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

​​தனியார் பஸ் தொழிற்துறையானது மிக அதிகமான சிரமத்தின் மத்தியிலேயே பொதுமக்களுக்கு தொடர்ந்து சேவையாற்ற வேண்டிய அவலநிலை தற்போது  ஏற்பட்டுள்ளது என்றார்.

Spread the love