ஜூலை 1 முதல் நடத்துனர்கள் இல்லாது பஸ்கள் சேவையில் !

போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் பணிப்புரைக்கமைய ஜூலை 1ஆம் திகதி முதல் நடத்துனர்கள் இல்லாத பேருந்து போக்குவரத்து சேவையை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. புதிய பொறிமுறையின் மூலம், நடத்துனர்களின் சம்பளம் மற்றும் பேருந்துகளின் இயக்கச் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை போக்குவரத்து சபை எதிர்பார்ப்பதாக அமைச்சர் கலாநிதி குணவர்தன தெரிவித்தார்.

“நாங்கள் முதலில் ஜூலை 01 முதல் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளில் நடத்துனர்கள் இல்லாமல் SLTB பஸ்களை முன்னோடி திட்டமாக இயக்கவுள்ளோம் . அது வெற்றியடைந்தால் மூலம் நாடு முழுவதும் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து சபை பஸ்களையும் பயணச்சீட்டு இயந்திரத்தின் செயற்பாட்டை மேற்பார்வையிடும் சாரதியுடன் மாத்திரம் இயக்க எதிர்பார்க்கின்றோம்’ இதன்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கான பயணச்சீட்டு பயணத்தின் ஆரம்பத்தில் மட்டுமே வழங்கப்படும் என போக்குவரத்து சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அடுத்த மூன்று மாதங்களில் அனைத்து உள்ளூர் பேருந்துகள் மற்றும் ரயில்களுக்கான இ-டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு செயல்பட்டு வருகிறது. ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் பிற வளர்ந்த நாடுகளில் பயணிகள் போக்குவரத்து சேவைகள் குறைந்த பட்ச ஊழியர்களைக் கொண்டு இயக்கப்படுகின்றன மற்றும் பேருந்துகள் ஒரு ஓட்டுனருடன் மட்டுமே இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love