ஜனாதிபதி ஆணைக்குழுக்களுக்காக 600 மில்லியன் ரூபா 8 வருடங்களில் செலவு

கடந்த 8 வருடங்களில் இரு அரசாங்கங்களினால் நியமிக்கப்பட்ட பத்து விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுக்களுக்காக கிட்டத்தட்ட 600 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகத்தில் சமாப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் தெரியவந்துள்ளதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. அதில், கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் ஒரு வருடத்தில் அதிகளவு பணம் செலவிடப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி விசாரணை ஆணைக்கு முவிற்காக அரசாங்கம் 120 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் திகதிக்கும் இவ்வருடம் ஜூன் 30ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு ஒன்றிணைந்த நிதியில் இருந்து பணம் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் இன்னும் செயல்படுகின்றன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2020 மற்றும் 2021 இற்கு இடையில் ஐந்து ஆணைக் குழுக்களை நியமித்துள்ளார், இதற்காக செலவிடப்பட்ட தொகை 337 மில்லியன் 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் தனது ஐந்தாண்டு காலப்பகுதியில் ஜனாதிபதி ஆணைக்குழுக்களுக்காக 254 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.

Spread the love