சூரியனின் வெப்பக் கீற்றுகளுடன் கூடிய புகைப்படைகளை அனுப்பியுள்ள பிரித்தானிய விண்கலம்

பிரித்தானியாவில் வடிவமைக்கப்பட்ட பெரிஹேலியன் விண்கலம் சூரியனின் வெப்பக் கீற்றுகளுடன் கூடிய மிக நெருங்கிய புகைப்படைகளை பதிவு செய்து பூமிக்கு அனுப்பியுள்ளது.

சூரிய கோள் தொடர்பான ஆராய்ச்சிகாக கடந்த மார்ச் 26ம் திகதி சூரியனில் இருந்து பூமிக்கு மூன்றில் ஒருபங்கு துரத்தில் உள்ள புதன் கோளின் சுற்றுவட்டப்பாதையில் பிரித்தானியாவில் வடிவமைக்கப்பட்ட பெரிஹேலியன் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டது. இந்த விண்கலமானது இதற்கு முன் சூரியன் குறித்த பல தகவல்களை பூமிக்கு அனுப்பி இருந்த நிலையில், தற்போது சூரியனின் மிக நெருங்கிய மற்றும் துல்லிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது. இந்த புகைப்படத்தில் சூரியனில் இருந்து வெளியேறும் நெருப்பு அலைகள் மற்றும் வெப்பக்கீற்றுகள் வெடித்து சிதறுவதை தெளிவாக பார்க்க முடிகிறது.

மேலும் சூரியனில் இருந்து வெளியேறும் இந்த வெப்பக்கீற்றுகள் மற்றும் குளிர்ந்த வாயுகள் சுமார் 15,000 மைல் தொலைவிற்கு வரை நீளுவதால் இதனை ஆராய்ச்சியாளர்கள் ”முள்ளம்பன்றி”(the hedgehog) என அழைத்துள்ளனர். இந்த புகைப்படம், புதிய தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆராய்சியாளர்களுக்கு மிகப்பெரிய திறவுகோலாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பிரித்தானிய விண்வெளி ஏஜென்சியின் விண்வெளி அறிவியல் தலைவர் கரோலின் ஹார்பர் தெரிவித்த தகவலில், பெரிஹேலியன் விண்கலம் அனுப்பியுள்ள புகைப்படம் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது, மற்றும் இதுவே தற்போது வரை சூரியனுக்கு மிக அருகில் எடுக்கப்பட்ட முதல் புகைபடம் என தெரிவித்துள்ளார்.

Spread the love