யாழ்ப்பாணம் – பருத்தித்துறையிலுள்ள மீன்பிடித்துறைமுகத்தின் அபிவிருத்தித் திட்டத்தைப் பொறுப்பேற்று முன்னெடுப்பதற்கு சீனா மற்றும் இந்தியா இடையே கடும் போட்டி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்த நிதி உதவியுடன் பருத்தித்துறை துறைமுகத் திட்டத்தை செயற்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. கொழும்பு துறைமுக திட்டத்திற்கு நிகராக வடக்கு மாகாணத்தில் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் பொருட்டு பாரிய நிதி முதலீ்ட்டில் இந்த மீன்பிடித் துறைமுகத்தினை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரைபடமும் தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.