சீனாவில் பரவியுள்ள கொவிட் பிறழ்வு இலங்கையிலும் உள்ளது: பேராசிரியர் மாளவிகே

தற்போது சீனாவில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் கொவிட்-19 வகைகள் இலங்கையிலும் உலகின் ஏனைய நாடுகளிலும் பல மாதங்களாக காணப்படுவதாக சுகாதார நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து வெளியிடப்பட்ட வரிசைமுறை தரவுகளின் அடிப்படையில் இது உறுதிப்படுத்தப்பட்டதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் தலைவரும் பேராசிரியருமான நீலிகா மாளவிகே தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Spread the love