சீனாவின் கொரோனா பாதிப்பு உண்மை நிலைமை குறித்து வெளிப்படுத்துமாறு உலக சுகாதார மையம் வேண்டுகோள்

சீனாவில் கொரோனா பாதிப்பு குறித்து உறுதியான தகவல் வெளியாகாத நிலையில் உண்மை நிலைமை குறித்து வெளிப்படுத்துமாறு உலக சுகாதார மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சீனாவின் வா்த்தக நகரான ஷாங்காயில் உள்ள மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள சிரேஷ்ட வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம் ஷாங்காய் நகரில் மட்டும் 2.50 கோடி பேர் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கணிக்க முடியும். இதேவேளை பெய்ஜிங், தியான் ஜின், சோங்கிங், குவாங்சூ நகரங்களிலும் தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.இது இவ்வாறிருக்க சீனாவுக்கு இலவச கொரோனா மருந்து வழங்க ஐரோப்பிய யூனியன் சம்மதம் தெரிவித்து உள்ளது.

Spread the love