சட்டங்களை பற்றி தெரியாத மனநோயாளிகளே 13க்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கின்றனர்- சந்திரிகா பண்டாரநாயக்க

“நாட்டில் உள்ள சட்டங்களை பற்றி முழுமையாக தெரியாத மனநோயாளிகளே 13க்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கின்றனர்.” இவ்வாறு, முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளனர்.

13 ஆம் திருத்த சட்டத்தை எதிர்த்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

“1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் உருவான இந்த 13 ஆம் திருத்த சட்டம் நாடாளுமன்றத்தின் அனுமதியுடனேயே நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்தா திருத்த சட்டத்தில் உள்ள விடயங்கள் இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதோடு, அதை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதிகாரங்கள் பகிரப்படாமல் இன நல்லிணக்கம் ஏற்படாது” இவ்வாறு முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

Spread the love