கொவிட் தொற்றுக்குள்ளாகிய அர்ஜுன்!

தனக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நடிகர் அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.

“எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தேவையான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். என்னோடு தொடர்பில் இருந்த அனைவரும் தங்களைப் பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் நன்றாக இருக்கிறேன். அனைவரும் தயவுசெய்து பாதுகாப்பாக இருக்கவும். முகக்கவசம் அணிய மறந்து விட வேண்டாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love