கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நில அதிர்வு அளவீட்டு கருவிகள் பொருத்தப்பட வேண்டும் – நிபுணர்கள்

பேருவளை கடற்பரப்பில் அண்மையில் ஏற்பட்ட நில அதிர்வினால், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நில அதிர்வு அளவீட்டு கருவிகள் பொருத்தப்பட வேண்டியதன் அவசியத்தை புலனாய்வு நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொழும்பை அண்மித்த பகுதிகளில் இருந்து மேலதிக தரவுகள் பெறப்பட வேண்டியிருப்பதால், குறித்த பகுதிகளில் நில அதிர்வு அளவீட்டு கருவிகளை நிறுவ வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது பல்லேகல, மஹாகந்தராவ, புத்தங்கல மற்றும் ஹக்மன ஆகிய இடங்களில் நில அதிர்வு அளவீடுகள் நிறுவப்பட்டுள்ளன. அத்துடன், புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் அண்மையில் விக்டோரியா அணைக்கட்டு பகுதியில் பல நிலஅதிர்வு அளவீட்டு கருவிகளை நிறுவ நடவடிக்கை எடுத்தது. எனினும், இத்தகைய நில அதிர்வு அளவிகள் நாட்டின் மேற்குப் பகுதியில் நிறுவப்படவில்லை.


இவ்வாறானதொரு பின்னணியில், நாட்டின் பிரதான வர்த்தகத் தலைநகரான கொழும்பு உட்பட நாட்டைச் சூழவுள்ள பிரதேசங்களிலிருந்து நில அதிர்வு தொடர்பான தரவுகளைப் பெற்றுக்கொள்வதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென பேராசிரியர் அதுல சேனாரத்ன சுட்டிக்காட்டுகிறார்.

Spread the love