கொழும்புக்கு, புதுடில்லி விடுதிருக்கும் சமிக்ஞை

இந்தியாவின் தாராள மனப்பான்மையுடனான கடன் வசதிகளும் மன நிறைவை ஏற்படுத்தியிருந்தபோதிலும் அது வெறுமனே பின்வாங்கப்படாததொன்றல்ல என்பது குறித்து கொழும்பிற்கு புதுடில்லி சமிக்ஞை செய்திருக்கிறது.

இதேவேளை, இந்த மாத இறுதி வரை நாட்டிற்கு எரிபொருள் வருவதற்கான சாத்தியப்பாடு அருகியே காணப்படுகிறது. புதிதாக இறக்குமதி செய்வதற்கான பதிவுகள் எதுவும் செய்யப்படவில்லையென கூறப்படுகிறது – தனியாக, இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் மூன்று வெவ்வேறு டீசல் மற்றும் பெற்றோல் இறக்குமதிக்கு ஒழுங்கு செய்திருப்பதாக கூறியுள்ளது – இதன் பிரகாரம் இந்த மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து மட்டுமே எரிபொருள் வந்து சேரும் சாத்தியம் காணப்படுகிறது அதேசமயம், நாடளாவிய ரீதியில் தேவைகளைப் பூர்த்தி செய்ய இவை போதுமானதாக இருக்காது எனவும் சில நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

பல மாதங்களாக நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அரசாங்கம், முழுமையாக பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ள திட்டமிடத்தவறிவிட்டது என்ற விமர்சனங்கள் மேலெழுந்துள்ளன. அதே சமயம் இந்தியாவின் தாராள மனப்பான்மையுடனான கடன் வசதிகளும் மனநிறைவை ஏற்படுத்தியிருந்தபோதிலும் அது வெறுமனே பின்வாங்கப்படாததொன்றல்ல என்பது குறித்து கொழும்பிற்கு புதுடில்லி சமிக்ஞை செய்திருக்கிறது. ஏனெனில் இந்தியா அதன் சொந்த கடப்பாடுகளைக் கொண்டிருகிறது, மேலும் பெருகிவரும் நிதிக் கடப்பாடுகளுக்கு மத்தியில் இலங்கை அரசாங்கத்தின் திருப்பிச் செலுத்தும் திறனைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருந்தது. இதேபோன்ற செய்தியை சமீபத்திய சந்திப்பின் போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிடம், தெரிவித்திருந்தார்.

மூன்று தவணைகளில் சுமார் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் இடையீட்டு நிதி என்று ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட கொள்கையில் இப்போது புதிய நிபந்தனைகள் இருப்பது குறித்து அரசாங்கத் தலைவர்கள் இந்தியா தொடர்பாக கவலை கொண்டுள்ளனர். நிபந்தனைகள் பற்றிய விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர இலங்கைக்கு வேறுவழியில்லை. இடையீட்டு நிதி பிரிட்ஜ் பினான்ஸ் என எந்தவொரு குறிப்பிடத்தக்க தொகையையும் உறுதி செய்த ஒரே நாடாக இந்தியா உள்ளது. பதிலுக்கு, இந்தியாவும் முடிந்தவரை பல மூலோபாய சொத்துக்களைப் பாதுகாப்பதன் மூலம் தனது தடத்தை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் குழு கொழும்பில் இருந்த அதே சமயத்தில் இந்தியதரப்பின் உயர்மட்ட விஜயமானது நாணய நிதியத்துடன் எட்டப்படும் எந்தவொரு அலுவலர்மட்ட ஒப்பந்தமும் இந்தியா நிர்ணயித்த விதிமுறைகளுடன் இணங்கிப்போவதை உறுதி செய்வதாகுமென சண்டே டைம்ஸ் நேற்று தெரிவித்துள்ளது.

Spread the love