கார்த்திக் உடன் நடிக்கும் ஷங்கர் மகள்

முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் கார்த்திக் நடித்துள்ளார். பருத்திவீரன் கெட்டப்பில் கார்த்தி இருக்கும் விருமன் படம் மதுரை சுற்றுவட்டாரத்தில் எடுக்கப்பட்டது. இப்படத்தில் கார்த்தி ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். முதல்முறையாக கோலிவுட்டில் அறிமுகமாகும் அதிதி விருமன் படத்தில் கிராமத்து பெண்ணாக தேன்மொழி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் விருமன் படத்தின் இயக்குனர் பேட்டி ஒன்றில் அதிதியின் நடிப்பை பற்றி பாராட்டிப் பேசினார். மேலும் கார்த்தி, அதிதி ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்படத்தில் அதிதி துணிச்சலான மதுரை பெண்ணாக தாவணி பாவாடை உடையில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். அத்துடன் விருமன் படத்தில் கார்த்தி, அதிதி இடையேயான கெமிஸ்ட்ரி பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்து இருக்கிறார்கள். கார்த்தியின் மற்ற படங்கள் போலவே கிராமத்தின் சாயலில் உள்ள விருமன் படமும் ரசிகர்கள் விரும்பும் படி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Spread the love