கடைசி ஓவர்களில் அதிக ஓட்டங்கள். இந்தியா புதிய சாதனை

டெத் ஓவர் என அழைக்கப்படும் கடைசி 5 ஓவர்களில் இந்தியா அதிக ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்துள்ளது. இந்தியா, மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது மற்றும் கடைசி T20 போட்டி நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்கள் குவித்தது. இதையடுத்து விளையாடிய மேற்கிந்தியதீவுகள் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை பெற்றது. இதன் மூலம் இந்தியா 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.

Spread the love