கடன் வாங்கியாவது நிலைமையை சமாளிப்போம் – ஜோன்ஸ்டன்

நாட்டு மக்கள் பட்டினியிருக்க இடமளிக்கமாட்டோம். கடன் வாங்கியாவது, நெருக்கடி நிலைமையை சமாளிப்போம் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ (Johnston Fernando) தெரிவித்துள்ளார்.

தற்போதைய பிரச்சினைகள் தற்காலிகமானவை. அவை விரைவில் தீர்க்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் காணி அபிவிருத்தி கட்டளைச்சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தனது உரையில், நாட்டில் பஞ்சம் வரும் என எதிரணிகள் அறிவிப்புகளை விடுத்துவந்தன. அதற்கு நாம் இடமளிக்கவில்லை. மக்களுக்கு தேவையானவற்றை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வழங்கிவருகின்றோம்.

டொலர் பிரச்சினை, எரிவாயு பிரச்சினை மற்றும் எரிபொருள் பிரச்சினையெல்லாம் தற்காலிகமானவை. அவை தீர்க்கப்படும். கொரோனா பெருந்தொற்றிலிருந்து இந்நாட்டு மக்களின் உயிர்களை அரச தலைவரே பாதுகாத்தார். எனவே, இந்த சவால்களையும் அரச தலைவர் தலைமையில் வெற்றிகொள்வோம். நல்லாட்சியில் இடம்பெற்ற கொடூரங்கள் நாட்டு மக்களுக்கு தெரியும். தற்போது எதிரணிக்குள் அரச தலைவர் வேட்பாளர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love