ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்தியாவை பின்தள்ளிய பாக்கிஸ்தான்

ஒருநாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து முதல் இடத்திலும், இங்கிலாந்து 2 ஆவது இடத்திலும் உள்ளது. இந்தப் பட்டியலில் அவுஸ்திரேலிய அணி 3 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இந்திய அணியைப் பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் அணி 4 ஆவது இடத்தை பிடித்துள்ளது. மேற்கிந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற 3 ஆவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதனால் புள்ளிப்பட்டியலில் அந்த அணி இந்திய அணியை விட 1 புள்ளிகள் கூடுதலாக பெற்று 4 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய அணி 105 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் உள்ளது. தென் ஆபிரிக்க அணி 6ஆவது இடத்தில் நீடிக்கிறது. வங்காளதேசம், இலங்கை மற்றும் மேற்கிந்திய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Spread the love