ஒமிக்ரோன் மாறுபாடு எலிகளிலிருந்து தோன்றியிருக்கலாம்- சீன விஞ்ஞானிகள் தகவல்

கோவிட் வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாடு எலிகளிலிருந்து தோன்றியிருக்கலாம் என சீன விஞ்ஞானிகள் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வை சீன (China) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இதில் கோவிட் வைரஸ் மனிதர்களிடமிருந்து எலிகளுக்கு பரவியது என்பதற்கு வலுவான சான்றுகள் கிடைத்துள்ளதுடன், பல பிறழ்வுகளைக் கடந்து மீண்டும் இது மனிதர்களுக்கு வந்தது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

எலிகளிலும் மனிதர்களிலும் ஓமிக்ரானின் 5 பிறழ்வுகள் கோவிட் வைரஸின் (Coronavirus) இந்த பிறழ்வில் வெளிவந்துள்ள சில விஷயங்கள், முந்தைய நோயாளிகளின் மாதிரிகளில் அரிதாகவே கண்டறியப்பட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களில் ஒமிக்ரோன் மாறுபாட்டின் ஐந்து பிறழ்வுகள் எலிகளின் நுரையீரல் மாதிரிகளில் காணப்படுவதைப் போலவே இருக்கின்றன என்பது தெரியவந்துள்ளது.

ஒமிக்ரோன் 50க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் உள்ளன. இந்த ஆய்வை ஷாங்காய் பல்கலைக்கழகம் மற்றும் தியான்ஜினில் உள்ள தொற்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான தேசிய நிறுவனம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். இது உயிரியல் பாதுகாப்பு இதழில் வெளியிடப்பட்டது. இந்த ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஒமிக்ரோன் தோற்றம் பற்றி இன்னும் தெரியவில்லை. இது 50 க்கும் மேற்பட்ட பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. அவற்றில் பல முந்தைய வகைகளில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love