எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மேலும் நெறிப்படுத்துவது அவசியமானது- உயர் நீதிமன்றம்

இலங்கை போக்குவரத்து சபையின் ஊடான எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மேலும் நெறிப்படுத்துவது அவசியமானது என உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த இரண்டு அடிப்படை உரிமை, விஜித் மல்லல்கொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற குழு முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, மக்களுக்கு எரிபொருள், மின்சாரம், உணவு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகள் போன்ற சேவைகளை தொடர்ந்து வழங்குவதற்கான நீண்ட கால மற்றும் குறுகிய கால திட்டங்களை தயாரிக்க அரசாங்கத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மனுக்கள் மீதான விசாரணை ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Spread the love