உலகின் அதிக வயதான கொரில்லா ஒஸி உயிரிழப்பு

உலகின் அதிக வயதான கொரில்லாவான ஒஸி உயிரிழந்துள்ளதாக விலங்கியல் பூங்கா நிர்வாகிகள் தெரிவித்தனர். அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா உயிரியல் பூங்காவில் வசித்து வந்த இந்த கொரில்லாக்குரங்கை பார்ப்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் வருவது வழக்கம். ஐந்து தலைமுறைகளைக் கண்டுள்ள இந்த கொரில்லாக் குரங்கு உயிரிழந்துள்ளமை அங்கு வரும் பார்வையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் ஓஸியின் மரணத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கொரில்லாக் குரங்குகள் வழமையாக 40 ஆண்டுகள் வரை உயிர் வாழும் நிலையில் இந்தக் குரங்கு 60 ஆண்டுகள் வரை வாழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love