உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா

கப்பல் எதிர்ப்பு ரொக்கெட் அமைப்புகள் (anti-ship rocket systems) ஆட்டி லறி ரொக்கெட்டுகள் (artill ery rockets) ஹோவிட்சர் வகை பீரங்கிகள் (howit zers) மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட மேலும் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று முன்தினம் அறிவித்துள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடிய பைடன், புதிய ஆயுத உதவிகளை வழங்கும் உறுதிமொழியை அளித்தார். இதனைவிட உக்ரைனில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர், முக்கியமான மருத்துப் பொருட்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, உணவு, தங்குமிடம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பணம் வழங்குதல் உள்ளிட்டவற்றுக்கான மனிதாபிமான உதவியாக 225 மில்லியன் டொலர்களை வழங்குவதாகவும் பைடன் அறிவித்தார். 

Spread the love