உக்ரைனுக்கு மேலும் 1.5 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்கவுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் போரால் உக்ரைனின் பொருளாதார உட்கட்டமைப்பு வெகுவாகச் சிதைவடைந்துள்ளது.
அத்துடன் தானிய ஏற்றுமதிகளும் தடுக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக எதிர்வரும் சில மாதங்களில் உக்ரைன் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கவுள்ளது. இதனை உக்ரைன் தாக்குப்பிடிக்கவே உலக வங்கியால் 1.5 பில்லியன் டொலர் நிதி வழங்கப்படவுள்ளது என உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார். இதே வேளை உக்ரைனுக்கு இதுவரை உலகவங்கியால் 4 பில்லியன் டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.