உக்ரைன்: வெற்றி பெறுமா இரண்டாவது போர் நிறுத்தம்?

உக்ரைனில் மனிதாபிமான அடிப்படையில், தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் நாட்களில் சண்டை நடைபெறும் இடங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறும் பொருட்டு பாதுகாப்பான வெளியேற்றத்திற்கு உதவும் வகையில் இந்த போர்நிறுத்தம் கடைப்பிடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சண்டை நடைபெறும் முக்கிய பகுதிகள்

ரஷ்ய உக்ரைன் போர் ஆரம்பித்து இன்றுடன் பன்னிரண்டு நாட்கள் கடந்துவிட்ட நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் (Keiv) ஐ தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு ரஷ்யா கடல்வழி, தரைவழி, வான்வழி என மூன்று வழியினூடாகவும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி அதிரடியாக உள்நுழைய திட்டம் தீட்டியிருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியிருந்தார்.

உக்ரேனிலிருந்து மக்கள் அகதிகளாக வெளியேறும் பாதைகள்

குறிப்பாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், மக்கள் வெளியேறும் வகையில் போரை நிறுத்த வேண்டும் என ரஷ்யாவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனடிப்படையில் ரஷ்யா இதனை ஏற்றுக்கொண்டு கீவ், கார்கிவ், மரியபோல், சுமி ஆகிய நான்கு நகரங்களில்லும் போர் நிறுத்தப்படுவதாகவும் தனது ரஷ்ய ராணுவத்தைக்கொண்டு அறிவிப்பை மேற்கொண்டுள்ளது. இன்று 7ம் திகதி இலங்கை நேரப்படி மதியம் 12.30 மணியில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக கால எல்லையாக அது நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி போர் நிறுத்தப்பட்டு சூனியப் பிரதேசமாக்கப்பட்டு மக்கள் வெளியேறும் மனிதாபிமான பாதை திறந்து விடப்படும் என ரஷிய ராணுவம் அறிவித்துள்ளது.

Spread the love