இலங்கை-இந்திய கடற்படை பயிற்சி (SLINEX)-23

இலங்கை-இந்திய கடற்படை பயிற்சி (SLINEX)-23 இன் துறைமுக கட்டம் திங்கள் (ஏப்ரல் 3) தொடக்கம் (ஏப்ரல் 5) புதன் வரை கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்றுள்ளது. இந்திய கடற்படையின் இரண்டு கப்பல்களான ‘ஐஎன்எஸ் கில்தான்’ (INS Kiltan) மற்றும் ‘ஐஎன்எஸ் சாவித்ரி’ (INS Savitri) ஆகியவை கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை (SLN) ஊடகம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையின் சமுதுர மற்றும் விஜயபாகு கப்பல்களும் இப்பயிற்சியில் பங்கேற்கும். அத்தோடு, இந்திய கடற்படையின் டோர்னியர் கடல்சார் கண்காணிப்பு விமானம் மற்றும் சேடக் ஹெலிகாப்டர் மற்றும் இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகாப்டர் விமானங்களும் இதில் பங்கேற்கும் மற்றும் இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகாப்டர் விமானங்களும் இதில் பங்கேற்கும்.

கடற்படை பயிற்சியின் கடல் பயிற்சி கட்டம் ஏப்ரல் 6 – 8 வரை கொழும்பில் நடைபெற உள்ளதுடன் சனிக்கிழமை (08) இக்கூட்டு பயிற்சி முடிவடையும்.

நேற்று முன்தினம் காலை விஜயபாகு கப்பலில் இப்பயிச்சியின் ஆரம்ப நாள் நிகழ்வு இலங்கை கடற்படை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன தலைமையில் நடைபெற்றதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

கன்னரி பயிற்சிகள் (GUNEX), தேடல் மற்றும் மீட்பு பயிற்சிகள் (SAREX) உள்ளிட்ட கடற்படை சூழ்ச்சிகள் கடல் அணுகுமுறைகளில் நிரப்புதல் (RAS), எரிபொருள் அணுகுமுறைகள், உட்பட செங்குத்து நிரப்புதல் மற்றும் தேடல் மற்றும் மீட்பு பயிற்சிகளும் (VERTREP), இவ்வருட கூட்டுப்பயிற்சியின் போது நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கடல்படை கலாசார பரிமாற்ற நிகழ்ச்சிகள், நட்புரீதியான விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் யோகா பயிற்சிகளை இருநாட்டு கடற்படை பணியாளர்களின் பங்குபற்றலுடன் நடத்த உத்தேசித்துள்ளதுடன், இந்திய கடற்படை குழுவினரை பல முக்கிய உள்ளூர் சுற்றுலா தலங்களையும் பார்வையிட அழைத்துச் செல்லவும் திட்டமிட்டுள்ளது.

இலங்கையில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர், கடல்படை பிரதி தலைமை அதிகாரி மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க, மேற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா, ஐஎன்எஸ் கில்தான் மற்றும் ஐஎன்எஸ் சாவித்திரியின் கட்டளை அதிகாரிகளும் மற்றும் சிரேஷ்ட கடற்படைத் அதிகாரிகளும் தொடக்க விழாவில் கலந்துக் கொண்டனர்.

Spread the love