இலங்கை-இந்தியா இடையே விரைவில் கப்பல் சேவை

இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிப்பதற்குரிய பேச்சு வார்த்தைகள் இந்திய அரசுடன் இடம்பெற்று வருவதாக துறைமுகங்கள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்டு, காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இலங்கை-இந்தியாவுக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளதன் பிரகாரம் விரைவில் கப்பல் சேவையை ஆரம்பிக்கக் கூடிய சாத்திய கூறுகள் காணப்படுகின்றன.

துறைமுகத்துக்கு அருகில் சீமெந்து தொழிற்சாலை ஒன்று இயங்காத நிலையில் காணப்படுகின்றது. அதனை இயக்குவதன் மூலம்பொருளாதாரத்தை உயர்த்த முடியும். அதன்படி கைத்தொழில் அமைச்சு மற்றும் ஜனாதிபதியுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி வெகு விரைவில் அதனை இயங்குவதற்குரிய நடவடிக்கையை எடுக்க உள்ளோம். மேலும் வடக்குக்கான எரிபொருட்கள் தரை மார்க்கமாக பவுசர்களில் எடுத்து வரப்படுகின்றன. ஆனால் காங்கேசன் துறைமுகம் மீள திறக்கப்படும் போது கப்பல்களின் மூலம் எரிபொருளை இலகுவாக கொழும்பிலிருந்து எடுத்து வர முடியும் எனத் தெரிவித்தார்.

Spread the love