இலங்கை அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர்


இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து வீரர் போல் பார்ப்ரேஸ் இரண்டு வருட கால இடைவெளியில் நியமிக்கப்படவுள்ளார்.


அடுத்த மாத இறுதியில் இந்தியாவுக்கான சுற்றுப் பயணத்தின் போது போல் பார்ப்ரேஸ் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். உள்ளும் இரசிகர்கள் மற்றும் வீரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மிக்கி ஆந்தர், கடந்த ஆண்டு டிசம்பரில் தனது இரண்டு ஆண்டு இலங்கை தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காலத்தை நிறைவுசெய்தார். இந் நிலையிலேயே மிக்கி ஆர்தரின் இடத்தினை போல் பார்ப்ரேஸ் பூர்த்தி செய்யவுள்ளார். 2014 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியானது பங்களாதேஷில் ரி-20 உலகக் கிண்ணத்தை வென்றபோது, அணியின் தலைமைப் பயிற்சியாளராக போல் பார்ப்ரேஸ் செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Spread the love